Published On: Sunday, August 09, 2015
வியர்வையை இரத்தமாக சிந்தி உறுவாக்கப்பட்ட கட்சிதான் மு.காங்கிரசாகும் - வேட்பாளர் ஹரீஸ் ஆவேசம்
எமது மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கும் விடுதலைக்கும் பாதுகாப்புக்குமாக ஒரு இயக்கம் தேவை என்பதற்காக அன்று வியர்வையை இரத்தமாகச் சிந்தி உறுவாக்கப்பட்ட இயக்கம்தான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும். இந்த கட்சியில் இருந்த சிலர் கட்சியினூடாக பெறப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மாகாண சபை உறுப்பினர் பதவிகளுடன் வெளியேறிவிட்டு அமைச்சர்களாகி பணபலம் பெற்று இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தலைமையையும் விமர்சித்து வருகினறனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
“விழுமியங்களை காக்கும் விழுதுகள்” எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (09) சம்மாந்துறையில் இடம்பெற்றபோதே அங்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கிழக்கு மாகாண மக்களையும் எமது சமூகத்தையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக மறைந்த ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் முன்வந்து இளைஞர்களை அணி திரட்டி பல போராட்டங்களை நடாத்தினார். இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப அன்று பணபலம் ஆள்பலம் என்பன மிக அறிதாகவே காணப்பட்டது.
இந்த இயக்கத்தை எப்படியோ கட்டியெழுப்பவேண்டும் என்பதற்கா அன்று கல்முனை அம்மன் கோவிலடியில் இருந்துதான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை இயக்கி வந்தார். அதற்காக அவருக்கும் எமது மறைந்த தலைவர் அஷ்ரபின் குடும்பத்தினருக்கும் பல கொலை அச்சுருத்தல்கள் வந்தும் கூட அவர் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை கைவிடவில்லை. தொடர்ந்தும் முன்னெடுத்துவந்தார்.
இந்த போராட்டத்தை கைவிடவேண்டும் என்று பயங்கரவாதிகளின் உயிர் அச்சுருத்தல் ஒருபக்கம் மறுபக்கம் அவரின் குடும்பத்தினரின் அழுத்தங்கள் என்றெல்லாம் பல அழுத்தங்கள் வந்தும்கூட அவர் இந்த இயக்கத்தை கைவிடாமல் கொழும்புக்குச் சென்று இந்த இயக்கம் உறுவாகவேண்டும் இதன் மூலம் எமது சமூகம் பயனடையவேண்டும் என்பதற்காக அவர் அன்றுபட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
இவ்வாறு உறுவாக்கப்பட்ட இந்த கட்சியை அழிப்பதற்காகவேண்டி முன்னாள் அமைச்சர்களான றிஷாட் ஒரு பக்கமும் அலாஉல்லா மறுபக்கமும் இருந்துகொண்டு தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் எமது சமூகத்தையும் காட்டிக் டிகாடுத்து எமது கட்சியையும் தலைமையையும் பற்றி மக்கள் மத்தியில் மிகப் பிழையாகக் கூறி பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இவர்கள் செய்துவரும் பொய்ப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இளைஞர்களாகிய நீங்கள்தான் தக்க பதிலைக் கொடுத்து அவர்களை ஓடோட விரட்டியடிக்க வேண்டும் என்றார்.
என்றுஇ அன்று பல தியாகங்களை எமது சமூகம் செய்து அதற்காக ஒரு இயக்கம் தேவை அதற்கு சரியான தலைமையும் தேவை
எமது மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கும் விடுதலைக்கும் பாதுகாப்புக்காக ஒரு இயக்கம் தேவை என்பதற்காக அன்று வியர்வையை இரத்தமாகச் சிந்தி உறுவாக்கப்பட்ட இயக்கம்தான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.
அபு அலா –