Published On: Friday, December 25, 2015
நத்தார் தின ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 10வது நினைவு தினம்
நத்தார் தின ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 10வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் வணபிதா ஜோசப் பொன்னையா, காயத்திரி பீட பிரதம குரு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார், பேராசிரியர் எஸ்.பத்மநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், சி.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் இ.நித்தியானந்தம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, பிரின்ஸ் காசிநாதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுப் பேருரையாற்றினார்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்



