Published On: Sunday, December 27, 2015
2015 ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் ஞாபகச் சின்னம் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையினால் நடாத்தப்பட்ட முற்றத்து முகவரிகள் வரலாற்று ஆய்வு நூல் வெளியீடுகள் காரைதீவு சன்முகவித்தியால கேட்போர்கூட மண்டபத்தில் இன்று (27) இடம்பெற்றது.
வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ எழுதிய இந்த நூல் வெளியிட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முற்றத்து முகவரிகள் வரலாற்று ஆய்வு நூலின் முதல் பிரதியினை இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் யஹியாகான் பௌண்டேசன் சமூக சேவை அமைப்பின் தலைவரும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீட உறுப்பினரும் மற்றும் அம்பாறை மாவட்ட பொருளாளரு்மான யஹியாகானுக்கு வழங்கி வைத்தார்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள 2015 ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் ஞாபகச் சின்னங்களையும் சுகாதார அமைச்சர் வழங்கி வைத்தார்.
அபு அலா -