Published On: Friday, December 18, 2015
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 1000 பேருக்கு முகாமைத்துவப் பயிலுனர் பதவி -NDPHR
தனியார் மற்றும் அரச துறை நிருவனம்களில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த 1000 பேருக்கு முகாமைத்துவப் பயிலுனர் (Managemant Trainee) பதவி பெற்றுக் கொடுப்பதற்கான திட்டம் ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் வகுத்துள்ளார் .
இவர்களது பயிலும் காலத்தில் இவர்களுக்கான ஒரு கொடுப்பனவும் பெறக் கூடிய வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப் படும் பயிற்ச்சி முடிந்த பின்னர் இவர்கள் அதே நிறுவனத்தில் வேலை வாய்ப்புப் பெற கூடிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
படித்து முடித்தவுடன் எது வித அனுபமும் இன்றி ஒரு வேலையில் சேருவது என்பது கடினம் மட்டும் அல்ல அவர் சேரும் நிறுவனத்துக்கு ஒரு பாரமேஇமேலும் அவர்களால் எதுவித முன் அனுபவம் இன்றி வேலை செய்வதும் அவர்களுக்குக் கடினமே.
இத் திட்டத்துக்கு தனியார் மற்றும் அரச நிருவனம்கள் தங்களது பூரண ஒற்றுழைப்பினை வழங்குவார்கள் என நம்புவதாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கூறினார்கள்
