எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, December 18, 2015

கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் சுபீட்சம் பெற எமது புலம் பெயர் மக்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம்- றகீப் ஜௌபர்

Print Friendly and PDF

சர்வதேச புலம்பெயர் மக்கள் தினமான இன்று 18.12.2015 எமது கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் சுபீட்சம் பெற எமது புலம் பெயர் மக்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம். என்று இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம ஏற்பாட்டாளர் றகீப் ஜௌபர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் 1990   ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப் படுத்தப் பட்ட இந்த நாள் இன்று 25   வருடங்களை சந்தித்துள்ளது.


இந்த முக்கியத்துவம் மிக்க நாளில்  ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கு இணங்க  புலம் பெயர் தொழிலாளர்களினதும் அவர்களுடைய குடும்பங்களினதும் உரிமையும் பாதுகாப்பும் மேன்படுத்தப்பட்டு  பிரகடனத்தில் இருக்கின்ற அனைத்து அம்சங்களையும் எமது அரசாங்கங்கள் அமுல்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்த  உறுதி பூணுவோம்.

மேலும் கடல் கடந்து உறவுகளை பிரிந்து சென்று  தனது குடும்பத்திற்கான பயணத்தில் உயிர் நீத்த மற்றும் இன்னலுறுகின்ற எமது தொளிலாளர்கள் அனைவரையும் ஒரு கணம் நினைவு கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்திப்பதுடன் பெரு மனதோடு அவர்களுக்காக 02  நிமிடங்கள் மௌனம் காப்போமாக. என்றும் கோரியுள்ளார்.


-எம்.வை.அமீர்-

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2