Published On: Friday, December 18, 2015
30 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ உத்தியோகத்தர்கள் விடுதி அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுப்பு
அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ உத்தியோகத்தர்கள் தங்குவதற்கான விடுதி அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் இன்று (18) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இவ்வாறு அமையப்பெறும் மருத்துவ உத்தியோகத்தர்களின் விடுதி சகல வசதிகளுடன் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும், இது தொடர்பான கடிதம் ஒன்றை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் இ.ஸ்ரீதர் நேற்றயதினம் (17) அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மருத்துவ உத்தியோகத்தர்கள் தங்குவதற்கான விடுதி வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிமுக்கு வைத்திய அத்தியட்சகர் என்ற ரீதியில் இக்கோரிக்கையை முன்வைத்தமைக்கு அமைவாகவே இந்த விடுதி வசதிகள் அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.
அபு அலா -