Published On: Thursday, December 24, 2015
மீலாத் ஊர்வலம் ஏறாவூரில்
இறைதூதர் முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுமுகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குர்ஆன் மதரசாக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த பிரமாண்டமான இரண்டு ஊர்வலங்கள் 24.12.2015 காலை ஏறாவூரில் நடைபெற்றன.
21 குர்ஆன் மதரசாக்களைச் சேர்ந்த சுமார் 750 மாணவர்கள் இந்த ஊர்வலங்களில் கலந்துகொண்டனர்.
ஏறாவூர் -சத்தாம் ஹ{ஸைன் மாதிக்கிராமம்- பைஸானுல் மதீனா மதரசா முன்றலிலிருந்து மௌலவி ஐ.அப்துல் றஹீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஊர்வலம் தாமரைக்கேணி வழியாகச் சென்று மீண்டும் ஆரம்ப இடத்தில் நிறைவடைந்தது.
இதேவேளை வாளியப்பா கிராம பிரதேசத்திலிருந்து மௌலவி எம்எம் அறூஸ் தலைமையில் ஆரம்பமான மற்றுமோர் ஊர்வலம் பிரதான வீதி வழியாக மீண்டும் வாளியப்பா பிரதேசத்தை அடைந்து அங்கு நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றார்களும் கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவண்ணம் சென்றனர்.