Published On: Thursday, December 24, 2015
ஏறாவூர்ப்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் 53 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாண அமைச்சுக்களின் நிதியானது மூன்று மாவட்டத்திற்கும் விகிதாசாரத்தின் படி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் இதை ஒரு பிரதேசத்துக்கு மாத்திரம் செலவிட முடியாது.
எனது கிராமத்துக்கு எதுவும் செய்வதில்லை என சிலர் குறை கூறுகிறார்கள் ஆனால் கடந்த காலங்களில் மாகாண சபை நிதியிலிருந்து பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். இந்த ஆண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்கு மாத்திரம் சுமார் 53 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வந்தாறுமூலை உப்போடை வீதி கொங்கிறீட் இட்டு புனரமைப்புக்கு 30 இலட்சம் ரூபாவும், கொம்மாதுறை மதுராபுரி ஸ்ரீ அரசடி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கிணறு நிர்மானப்பணிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், பலாச்சேலை ஸ்ரீ பத்தினி அம்மன் ஆலய கட்டட நிர்மானத்துக்கு 50 ஆயிரம் ரூபாவும், சித்தாண்டி மஹா பெரியதம்பிரான் ஆலய புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாவும், சித்தாண்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கட்டட புனரமைப்புக்கு 50 ஆயிரம் ரூபாவும், வந்தாறுமூலை கிடாகுழி பிள்ளையார் ஆலயத்துக்கு 50 ஆயிரம் ரூபாவும், பலாச்சோலை வீதி புனரமைப்புக்கு இரண்டு இலட்சம் ரூபாவும், வந்தாறுமூலை நெடுவல்தம்பி வீதி கரச்சவெளி வீதி புனரமைப்புக்கு பத்து இலட்சம் ரூபாவும், செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாவும், சித்தாண்டி இந்து மயான வீதி புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாவும், சித்தாண்டி இந்து மயான சுற்றுமதில் நிர்மானிக்க இரண்டு இலட்சம் ரூபாவும், செங்கலடி அக்னி இசைக்குழுவிற்கு 60 ஆயிரம் ரூபாவும், ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க தளபாட கொள்வனவுக்கு 50 ஆயிரம் ரூபாவும், வந்தாறுமூலை ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலய புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாவும், சித்தாண்டி மாரிமுத்து வைத்தியர் வீதி புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கொம்மாதுறை மற்றும் சித்தாண்டி கிராமங்களின் கிராமிய வீதிகள் கிறவல் மூலம் செப்பனிடுவதற்காக தலா 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வந்தாறுமூலை உப்போடை வீதியில் உழவர் சிலை நிறுவுவதற்கு நான் தடையாக இருப்பதாக சிலர் புரளியைக் கிழப்பிவிட்டுள்ளனர். உழவர் சிலை அமைப்பதை எவரும் தடை செய்யவில்லை சரியான நடைமுறையை பின்பற்றி சிலை அமைக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்