Published On: Tuesday, December 29, 2015
சுயதொழில், சமூக நல்லிணக்கம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கான திட்டங்களை கிழக்கில் சாத்தியப்படுத்த உள்ளேன் -ஹுசைன் மெளலானா.
மாணவர்களது அறிவு மற்றும் ஆளுமை வித்திக்கான நல்ல திட்டங்ளை நடைமுறைப்படுத்த நான் தயார்" என்று மிலேனியம் கல்வி இஸ்தாபனத்தின் தலைவர் எஸ் ஹுசைன் மெளலானா தெரிவித்தார்
இறக்காமம் 10 ஏ கிராம பாசடாலைக்கு அல் ஹாஜ் முஸ்தபா மசூர் அவர்களது வேண்டுகோளுக்கு இனங்க வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் போதிகளை வழங்கிவைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு மெளலானா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் " சுயதொழில், சமூக நல்லிணக்கம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கான திட்டங்களை கிழக்கில் சாத்தியப்படுத்த உள்ளேன்" எனவும் தெரிவித்தார்.
இறக்காமம் 10 ஏ கிராமப் பாடசாலை அதிபர் ஹாருதீன் பேசுகையில் " கிராம மாணவர்களின் தேவையை அறிந்து, கொழும்பில் இருந்து நேரடியாகவே மாணவர்களுக்கான உதவிகளை கொண்டுவந்து வழங்கிய மெளலானா அவர்ளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்ததோடு, இன்நிகழ்வை சாத்தியப்படுத்த உதவிய அல்ஹாஜ் முஸ்தபா மசூர் அவர்களுக்கும் நன்றிகள்" எனத்தெரிவித்தார்.
(முர்சித்)


