Published On: Tuesday, December 29, 2015
கல்முனையில் ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பௌண்டேசன் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு
ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பௌண்டேசன் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு மாகாண சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு 2015-12-28 ஆம் திகதி திங்கள்கிழமை கல்முனை கடக்கரைப் பள்ளி வீதி மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலுக்கு அருகாமையில் ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பௌண்டேசன் தலைவர் மௌலவி எ.சி.எம்.முஹைதீன் மன்பயி தலைமையில் இடம்பெற்றது.
இம்மாபெரும் எழுச்சி மாநாட்டுக்கு தென்னிந்திய மார்க்கப் பெரியார் மௌலவி அப்லளுள் உலமா எம்.சைஹு அப்துல்லாஹ் ஜமாலி பிரதம அதிதியாக கலந்து சுவனத்துக்கு அழைத்துச்செல்லும் சுப்ஹான மவ்லித் எனும் தலைப்பில் நீண்ட சொற்பொழிவாற்றினார்.
ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பௌண்டேசன் பிரதித்தலைவர் எம்.அய்.எம்.ரியாஸ் அல்தாபி அவர்களின் முன்னிலையில், மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி ரீ.ஆர்.நௌபர் அமீன் வாஹிதி, மௌலவி எச்.எம்.சப்னிஸ் மன்பயி பாஸில் ஸகாபி, மௌலவி எஸ்.எம்.நிம்ஷாத் மன்பயி, மௌலவி எஸ்.எல்.அப்துல் றஹுமான் கௌஸி, மௌலவி எம்.ஸப்றான் கௌஸி உள்ளிட்ட பல உலமாக்களும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து தெளிவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
-எம்.வை.அமீர் -



