Published On: Tuesday, December 29, 2015
சீகிரியாவின் புராதன கட்டுமான பகுதியொன்று உடைந்து விழுந்துள்ளது
சிகிரியாவில், புராதன சாந்துத் (பதாம) தட்டு உடைந்து விழுந்துள்ளது. சீகிரிய ஓவியங்களுக்கு மேலுள்ள புராதன கட்டுமான பகுதியொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாந்துத் தட்டில், சுமார் ஒன்றரை அடி பரப்பளவான பகுதியே இவ்வாறு, 28.12.2015 அன்று உடைந்து விழுந்துள்ளது. இது தொடர்பிலான விவரங்களை, கொழும்பில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளுமாறு சிகிரியாவில் கடமையிலிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்காலப்பகுதியில் சீகிரியாவிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(க.கிஷாந்தன்)





