Published On: Wednesday, December 30, 2015
வரக்காபொல வாகன விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு
வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் 30.12.2015 அன்று அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல மற்றும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களிள் மூவர் பெண்கள் என்பதுடன் வேனின் சாரதி, குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனும் பொல்கஸ்கோவிட்ட பகுதியிலிருந்து பொலன்னறுவை சோமாவதிய யாத்திரைக்காக சிலருடன் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
(க.கிஷாந்தன்)


