Published On: Wednesday, December 30, 2015
மலையகத்தில் சிறுவர்களுக்கான போஷாக்கு, சுகாதாரம், கல்வி சம்மந்தமான விஷேட செயலமர்வு
மலையகத்தில் சிறுவர்களுக்கான போஷாக்கு, சுகாதாரம், கல்வி சம்மந்தமான விஷேட செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி செயலகம், யூனிசெப் நிறுவனத்தின் அணுசரணையில் கொட்டகலை, போகாவத்தை, கெலிவத்தை, திம்புல ஆகிய தோட்ட பிரதேசங்களில் தாய்மார்களுக்கான சிறுவர் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் 30.12.2015 அன்று இடம்பெற்றது.
இக்கருத்தரங்குகள் சுகாதார மேம்பாட்டு திணைக்களத்தின் அதிகாரிகளான தினேஸ்குமார், சுஷாந்த ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டது. இதில் 150 இற்கு மேற்ப்பட்ட தாய்மார்கள் கலந்துக்கொண்டதோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாந், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இளைஞர் தூதுவர் சுப்ரமணியம் ரமேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
(க.கிஷாந்தன்)