Published On: Wednesday, December 30, 2015
நோயற்ற சமூதாயத்தை உறுவாக்குவோம் அதற்கு எல்லோரும் கை கோர்ப்போம் சிகிச்சை முகாமில் பதில் வைத்திய அத்தியட்சகர்
எமது மூதாதையர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் உணவுப் பழக்கத்தையும் நாம் கடப்பிடித்து வருவோமாயின் ஒரு நோயற்ற சமூகத்தை உறுவாக்க முடியும் என அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜே.யூசுப் தெரிவித்தார்.
“நோயற்ற சமூதாயத்தை உறுவாக்குவோம் அதற்கு எல்லோரும் கை கோர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் அட்டாளைச்சேனையில் இன்று (30) இடம்பெற்ற வைத்திய சிகிச்சை முகாமில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்
இன்றைய சமூதாயத்தினர் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பார்ப்பதில்லை அதற்கு மாறாக அவர்கள் தங்களின் நாவுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், மிக விரைவாக கிடைக்கக்கூடிய உணவு வகைகளுக்கு பழக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். இதனை நாம் மாற்றியமைக்க ஒரு தனி நபராலையோ அல்லது வைத்திய ஆலோசனைகளின் மூலமாகவோ ஒருபோதும் மாற்றியமைக்க முடியாது.
அன்றைய எமது மூதாதையர்கள் வைத்திய சிகிச்சையென்று எந்த வைத்தியசாலைக்குச் சென்றார்கள். அவர்களுக்கு வைத்திய சிகிச்சையென்றால் என்னவென்றே தெரியாது. அந்தளவுக்கு அவர்களின் உணவுப் பழக்கங்கள் அமைந்திருந்தது. அதனால் நோயற்றவர்களாகவும் உடல் ஆரோக்கியமானவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் இன்றைய சமூதாயம், இதற்கு எதிர்மாறாக சுவையான உணவுகளை உண்ணவேண்டும் என்றநோக்கில் மிக விரைவாக கிடைக்கக்கூடியவாறு தங்களின் உணவுகளை அமைத்துக்கொண்டு வருகின்றனர். இதனால்வரும் ஆபத்துக்களை அவர்கள் அறிந்தும் அறியாதவர்கள்போல் இருப்பதை என்னவென்று சொல்லமுடியும். நாம் எமது நாவுக்கு அடிமையாகினால் ஒருபோதும் நோயற்றவர்களாக வாழமுடியாது.
இதனை மாற்றியமைக்கவும் ஒரு நோயற்ற சமூதாயத்தை உறுவாக்குவதற்கு எல்லோரும் கை கோர்த்தால் மட்டுமே ஒரு நோயற்ற சமூகத்தை உறுவாக்கவேண்டும் என்றார்.
அபு அலா –