Published On: Sunday, December 27, 2015
இலங்கை பட்டயப் பொறியியலாளராக பட்டம் பெற்ற பொறியியலாளர் லிங்கேஸ்வரன்
இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் இலங்கை பட்டயப் பொறியியலாளராக பட்டம் பெற்றார்.
அண்மையில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பட்டயப் பொறியியலாளர் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும்இமுன்னாள் கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞான பீடத்தின் மூத்த பேராசிரியர் மொஹான் டி சில்வா உட்பட இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் தலைவர் கலாநிதி எஸ்.பீ.விஜயகோன் ஆகியோரிடமிருந்து இலங்கை பட்டயப் பொறியியலாளராக பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் பட்டம் பெற்றிருந்தார்.
09-05-1986 திகதி நிந்தவூர் பிரதேச வைத்தியசாலையில் பிறந்த இவர் காரைதீவை பிறப்பிடமாகவும் தற்போது மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
தனது ஆரம்ப கல்வியை காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலத்திலும் உயர் கல்வியை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் பயின்றார்.
அதன் பின்னர் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் குடிசார் இயந்திரவியல் இளமாணிப் பட்டத்தைத் பூர்த்தி செய்து 2010ம் ஆண்டு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பல்வேறு செயற்திட்டங்களில் களப் பொறியியலாளராகவும்இ வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய காரியாலயங்களில் கடமையாற்றி தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தின் களப் பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார்.
அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை காரியாலயமான செத்சிறிபாயவில் பெருந்திரக்கள் பொறியியலாளர் வடிவமைப்பு பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்து அதன் பின்னர் இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் திறமை சித்தி பெற்று அண்மையில் இலங்கை பட்டயப் பொறியியலாளராக பட்டம் பெற்றார்.
கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிருவாகமும்இபொது முகாமைத்துவ பிரிவில் முதுமாணி மாணவராகவும் தற்போது இருக்கும் இவர் சமூக சேவையில் காரைதீவு விளையாட்டு கழகத்தின் பிரதித் தலைவராகவும்இகாரைதீவு விபுலானந்தா சனசமூக நிலையத்தின் உப தலைவராகவும்இஇலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும்இஐக்கிய ராஜியத்தின் பொறியியலாளர் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இற்றவரை சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.
இவர் ஒய்வு பெற்ற அரச வைத்தியசாலையின் சிரேஷ்ட பெண் பரிசாரகர் திருமதி இஞானம்பிகை மற்றும் வியாபாரி அருமைநாயகத்தின் மூத்த புதல்வரும் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி .டுஜித்திரா லிங்கேஸ்வரனின் கணவரும்; ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.