Published On: Sunday, January 03, 2016
09 புதிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான நியமனங்களை சுகாதார அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது
கிழக்கு மாகாணத்திலுள்ள 4 சுகாதார சேவைகள் பிராந்திய பணிமனைகள் காரியாலங்களுக்கு 09 புதிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாணப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகாணந்தம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு திருகோணமலை மாகாண பணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனங்களைப் பெற்ற 09 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களில் 3 போர் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலத்தியத்துக்கும், 3 போர் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலத்தியத்துக்கும், 3 போர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலத்தியத்துக்கும், ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை காரியாலத்தியத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு நியமனங்களைப் பெற்ற 09 புதிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (04) தங்களின் கடமைகளை பொறுப்பேற்கும்படி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பணிப்புரை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.லாகிர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுதீன், மாகாணப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகாணந்தம், பிரதி மாகாணப் பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில் ஆகியோர் இதில் கலந்துகொண்டு இந்நியமனங்களை வழங்கி வைத்தனர்.
அபு அலா –



