Published On: Monday, January 04, 2016
1 கோடி நிதியில் அட்டாளைச்சேனை பிரதேசம் பாரிய அபிவிருத்தியுடன் இன்னும் பல அபிவிருத்திகள் சுகாதார அமைச்சர் கூறினார்
அட்டாளைச்சேனையிலுள்ள 10 பள்ளிவாயல்களுக்கு தலா 10 இலட்சம் வீதம் படி ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்த அபிவிருத்தி வேலைகள் முடிவுற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைசேனை மத்திய குழுக்கூட்டம் நேற்றிரவு (03) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொங்றீட் வீதிகளை நிர்மானித்தவர்கள் அவ்வீதிகளுக்கு தார் இடாமல் விட்டதால் இந்த கொங்றீட் வீதிகள் யாவும் சேதமடைந்து வருகின்றது. இவ்வீதிகள் அனைத்துக்கும் தார் இடுவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுள்ள இதேவேளை வடிகான்களுக்கு 10 இலட்சம் ரூபா செலவில் மூடிகளும் போடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விடுபட்ட வீதிகள் யாவும் இவ்வருட இறுதிக்குள் முற்று முழுதாக நிர்மானித்து மக்கள் பாவனைக்கும் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளைஇ அம்பாறை மாவட்டத்திலுள்ள மிக வறிய குடும்பங்களுக்கு குடிநீர் மற்றும் கிராமிய மின்சாரம் பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுத்து அவர்களுக்கான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான ஆவனங்களையும் வழங்கி வருகின்றேன். அட்டாளைச்சேனை பிரதேசத்துக்காக மட்டும் 30 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான ஆவனங்கள் இவ்வாரம் வழங்கி வைக்கப்டவுள்ளது என்றார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட், இணைப்பாளர் ஜெமில் காரியப்பர், மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், மு.காவின் அட்டாளைச்சேனை 17 கிளைக்குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் பல கருத்துக்களையும் தெரிவித்தனர்.
அபு அலா –