Published On: Monday, January 04, 2016
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீன வர்களையும், அவர்களது படகு களையும் பொங்கல் பண்டிகைக்குள் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.
கும்பகோணத்தில் செய்தி யாளர்களிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறிய தாவது: மகாமகத் திருவிழாவுக் காக ரயில்வே துறை தஞ்சை- மயிலாடுதுறை இடையேயுள்ள அனைத்து ரயில் நிலையங் களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக் கியுள்ளது. ஆனால், இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுகின்றன. இப்பணி களை விரைவுபடுத்த வேண்டும்.
மகாமக விழாவில் வெளி மாநில மக்கள் அதிக அளவில் கலந்துகொள்ளும் வகையில் தொலைதூர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். இதுதொடர் பாக டெல்லியில் ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.
வீர விளையாட்டான ஜல்லிக் கட்டை முறையாகவும், உரிய பாதுகாப்போடும் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். கும்பகோணத்தை பாரம் பரிய நகராக அறிவிப்பதுடன், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கொண்டுவந்து, மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்.கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.5 ஆயிரம் கோடியை வரும் பொங்கல் பண்டி கைக்குள் விவசாயிகளுக்கு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வாசன்.