Published On: Friday, January 15, 2016
முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது 2ஆவது சிரமதான நிகழ்வு.
முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது காத்தான்குடி குழுவினரால் இன்று (15/01/2016) ம் திகதி காத்தான்குடி ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் பெளதீக குறை பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது..
முஹாசபா மீடியா நெட்வொர்க் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சமூக நலன் செயற்திட்டங்களில் ஒன்றாக இச் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
இத் தூய பணியில் அதிக சகோதரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.. கலந்து கொண்ட சகோதர்களுக்கும் , உதவிகள் புரிந்த சகோதரர்களுக்கும் முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஜுனைட்.எம்.பஹ்த் நன்றி தெறிவித்தார்





