எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 15, 2016

தீவிரமடையும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாடு பொருளாதார வங்குரோத்து நிலைக்குள் விழக்கூடிய அபாயம் உள்ளது

Print Friendly and PDF

இலங்கைப் பொருளாதாரம் எதிர் கொள்ளும் தீர்க்கமான நெருக்கடியின் பண்பையும், தீவிரமடையும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாடு பொருளாதார வங்குரோத்து நிலைக்குள் விழக் கூடிய அபாயம் உள்ளது.

இலங்கை கடந்த ஆண்டுகளில் அதிகம் கடன் பெற்றதனூடாகவே உயர்ந்த வளர்ச்சி வீதத்தை காட்டியது, அது நிரந்தரமான வளர்ச்சி அல்ல அவ்வளர்ச்சி  கீழிறங்கியுள்ளது, அதிகரித்த கடன் பெறுவதால் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மேலும்விரிவடைந்ததோடு அது இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக் குறை அதிகரிப்பதற்கும் காரணமாகி உள்ளது

இலங்கையின் உயர்ந்த பணவீக்க வீதம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியஒன்றியத்தில் காணப்படும் நூற்றுக்கு 1.5 விகித பணவீக்க வீதத்தை விட அதிகமாகவும், திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளுக்காக குறுகியகால ஸ்திரமற்ற வெளிநாட்டுப் பணம் கிடைப்பதனால்,அதன் மீது அரசாங்கம் தங்கியிருக்கிறது.

அரசாங்கம் அல்லது கூட்டுத்தாபனங்கள் கடன்களை மீளக் கொடுப்பதற்கு இயலுமை உடையனவா இல்லையா என்பதை பொருட்படுத்தாது, குறைந்த கால கடன் பெறுதலின் மீதே தங்கியிருந்தால், கடன் வழங்குநர்கள் நம்பிக்கை தகர்ந்து, களத்தில் இருந்தே காணாமல் போய்விடுவர்.

எந்தளவு மக்களின் வெறுப்புக்கு உள்ளாகினாலும், தகுந்த பொருளாதார சீர்திருத்தத்தை செய்ய வேண்டும்.செலவீனத்தை அதிகரிப்பதற்கு முன்னர், வருமானத்தை அதிகரிக்க வேண்டும், இன்று நடப்பது யாதெனில், ஏற்படப் போகும் விளைவைப் பற்றி கவனிக்காது, வெளிநாட்டு வர்த்தக சந்தைகளில் கடன் பெற்று செலவு செய்வதே. மக்கள் மீது மென்மேலும் வரிச்சுமையை சுமத்த வேண்டும் என்பதே இந்த விளக்கத்தின் அர்த்தமாகும்.

அரசதுறை நிறுவனங்களின் முகாமைத்துவத்தை அபிவிருத்தி செய்து, செயற்பாட்டை உயர்த்தி, வீண்  விரயம் , ஊழல், மற்றும் மேற் பூச்சுக்களையும் நிறுத்தவேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டை வரவழைக்க, சமாதானம் மட்டும் போதாதுள்ளதுடன் நேர்மையான ஆட்சி, சட்ட ஆட்சி, தகவல் பெறும் உரிமை, செயற்பாடு, நேர்மையான மற்றும் சுயாதீனமான அரச நிறுவனங்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்கள், சரளமான வரி மற்றும் குடிவரவு குடியகல்வு விதிகளும் அவசியம்.சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதில் ஏற்படும் பலவீனம் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்கு பாதகமாக விளங்குகிறது

இலஞ்சம் மற்றும் வீண் விரயமும் அதன் அங்கமாக இருக்கும் அதே வேளை, இந்த நிலைமைகளின் கீழ் சுதந்திர ஊடகமும் சுயாதீன அரச நிறுவனமும் இயங்க முடியாது. ஆகையால், அரசாங்கம் தொடர்பாகவும் பொதுவில் முதலாளித்துவ அமைப்பு எதிர் கொண்டுள்ள தீவிரமான நெருக்கடி தொடர்பாகவும் பார்க்கும் போது, அதாவது .சுருங்கக்கூறின், நெருக்கடி மிக்க ஆட்சி, நேர்மையான ஆட்சியாக விளங்குவது சாத்தியமற்றதாகும்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2