Published On: Friday, January 01, 2016
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம்
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ஆர்.ராஜாராம், அட்டன் நகர சபையின் முன்னால் தலைவர் நந்தகுமார் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)