Published On: Monday, January 11, 2016
80 உலமாக்களை அழைத்து பேசினோம் 65 சதவீதம் பேர் அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஆதரவு
70 முதல் 80 உலமாக்களை அழைத்து பேசினோம். அதில் 65 சதவீதம் பேர் அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் அமைப்பின் தேசிய அமைப்பாளர் முகம்மது அப்சல் அறிவித்துள்ளது.
ராமர் இந்தியர்களின் சின்னமாக விளங்குகிறார் என அந்த அமைப்பை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறினார். இந்த உண்மை குறித்து முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ராமர் இந்துக்களின் கடவுளாக விளங்கும் அதே நேரத்தில், பாபரை முஸ்லிம்கள் வணங்கவில்லை என்றார் குமார்.
அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை பெற்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இதற்காக முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் அமைப்பின் தேசிய அமைப்பாளர் முகம்மது அப்சல் கூறினார்.
எங்கள் அமைப்புடன் தொடர்புடைய பெரும்பாலான உலாமாக்கள் அயோத்தியில் கோயில் கட்டப்படுவது அவசியம் என கருதுகின்றனர் .ராமர் கோயில் தொடர்பான வழக்கில் உத்ர பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது 70 முதல் 80 உலமாக்களை அழைத்து பேசினோம். அதில் 65 சதவீதம் பேர் அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், நாட்டில் சகிப்புதன்மை இல்லாத நிலை நிலவுவதாக கூறுவதை மறுத்த அப்சல், அயோத்தியில் சர்ச்சைக்குள்பட்ட பகுதியில் தற்காலிக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதே இதற்கு சான்று என கூறினார்.
