Published On: Friday, January 08, 2016
ஒன்று கூடல் நிகழ்வும், பட்டதாரிகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடும்
தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கத்தின் 2016 ஆண்டின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும்இ பட்டதாரிகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹூசைன் முபாறக் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளல் 5200 பட்டதாரி நியமனத்திற்குள் எச்.என்.டி.ஏ. பட்டதாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கிழக்கு மாகாண சபை வழங்கும் நியமனத்திற்குள் எச்.என்.டி.ஏ. பட்டதாரிகளையும் உள்வாங்குவது தொடர்பாக ஆராய்தல் போன்ற பல்வேறு விடயங்களையும், பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பெறுவது தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் சகல அங்கத்தவர்களும் இவ்வொன்று கூடலில் தவறாது கலந்து கொள்ளுமாறும் செயலாளர் ஹூசைன் முபாறக் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(எஸ்.அஷ்ரப்கான்)