எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 08, 2016

கல்முனை மக்களை கிணத்துத் தவளைகளாக வாழ வைக்கவா தமிழ் தலைமைகள் விரும்புகின்றனர்? – பிரதி அமைச்சர் ஹரீஸ் கேள்வி

Print Friendly and PDF


கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தினை மட்டும் தடுக்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை கிணத்துத் தவளைகளாக உலக நடப்பின்றி ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஒரு இருண்ட குக்கிராம மக்களாக வாழ வைக்கவா விரும்புகின்றார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருதமுனை பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் தரம் 06க்கான அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் இவ்வாறு கேள்வி எழுப்பி தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட சிலர் இன்று தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் முஸ்லிம் மக்கள் மட்டும் அவர்களுடைய பிரதேசத்தை மட்டும் அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விடுகின்றார்கள்.

கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் பிரதேசங்களை விட்டு விட்டு முஸ்லிம் பிரதேசங்களை மட்டும் அபிவிருத்தி செய்தால், நாளை பாராளுமன்றத்தில் நகர அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா உரியது, முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா அபிவிருத்தி, தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி இல்லையா, தமிழ் மக்களை புறக்கணித்து விட்டார்கள் என்று பேசுவார்கள்.

கல்முனை மாநகர அபிவிருத்தி எல்லாச் சமூகங்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எல்லோரையும் அரவணைத்து இந்த அபிவிருத்தியைச் செய்ய வேண்டும் என முயற்சித்து வருகின்றோம்.

அரசின் நரக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களின் நகரங்கள் சர்வதேச தரத்திற்கு ஒப்பான முறையில் சகல வசதிகளுடன் கூடியவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு அங்குள்ள மக்கள் சகல வசதிகளையும் பெறுகின்றபோது, கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தினை மட்டும் தடுக்கின்ற கல்முனையின் தமிழ் அரசியல் தலைமைகள் கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் கிணத்துத் தவளைகளாக உலக நடப்பின்றி ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஒரு இருண்ட குக்கிராம மக்களாக வாழ வைக்கவா விரும்புகின்றார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

கல்முனையின் அபிவிருத்தியை பிற்போடுவதற்கு சில நாசகார சக்திகள் திட்டமிட்டு செயற்படுகின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக எமது தலைமை தமிழ்த் தலைமைகளுடன் பேசியிருக்கின்ற நிலையில் சிலரின் இந்த நடவடிக்கைகள் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்கிடையில் மீண்டும் மனக்கசப்புக்களை தோற்றுவிக்கும் என கவலைப்பட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

(ஹாசிப் யாஸீன், எஸ்.அஷ்ரப்கான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2