Published On: Monday, January 04, 2016
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் விஷேட சொற்பொழிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், இம் மாதத்துக்கான சொற்பொழிவு
நாளை 5ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு ‘சகவாழ்வும் பொறுப்புக்களும் கடமைகளும்’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
இவ்விஷேட சொற்பொழிவை, அகுரணை இஸ்லாமிய்யா கல்லூரி பணிப்பாளரும், வடதெனிய கதீஜதுல் குப்ரா பெண்கள் அறபுக்கல்லூரி நிர்வாக செயலாளருமான சகோதரர் ஸாஜஹான் உடையார் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு: 0766529128
(ஜுனைட்.எம்.பஹ்த்)
