எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, January 04, 2016

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு

Print Friendly and PDF

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி இது ஒரு வரலாற்று பார்வை…

(வரலாற்று குறிப்பு - ஊடகவியலாளா் எம்.ரீ.எம்.பாரிஸ் உப செயலாளா், பழைய மாணவா் ஒன்றியம்
மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்)

இலங்கை பரீட்சை தினணக்களம்  வெளியிட்ட கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கோட்ட  மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளா்ச்சியில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்  ஒரு புதிய அத்தியாங்களை தோற்று வித்துள்ளது.

இப்பாடசாலை  கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தின் தெற்கே அமைத்துள்ள ஒரு அழகிய இயற்கை சூழலை கொண்ட இப்பாடசாலை அமைத்துள்ள கிராமம் மீராவோடை ஆகும். இப்பாடசாலையினை சுற்றியுள்ள கிராமங்களான பதுரியாநகா்இமாஞ்சோலை பிரதேச மாணவா்கள் கல்வி கற்கின்றனர்.

இக்கிராமங்கள் அனைத்தும் அன்றாடம் கூலி தொழில் செய்யும் வறிய மக்கள் வாழும் விவசாய கிராமங்களாகும் இங்குள்ள மக்கள் தமது வாழ்வாதாரமாக மந்தை வளா்ப்பு, கோழி வளா்ப்பு, பாய், தட்டு பின்னுதல், வயல், மரக்கறி தோட்டம் செய்தல், தச்சு, கொத்தன், மீன் பிடி போன்ற தொழிலில் ஈடுபடும் மக்களாகவுள்ளனர். இவ்வாறான தொழிலை செய்யும் மக்கள் தமது அன்றாட தேவைகளை தமது சிறிய வருமானத்தில் இருத்துதான் நிறைவு செய்ய வேண்டிள்ளது.

தமது பிள்ளைகளை பல கஸ்டங்களுக்கு மத்தியில் படிப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயினும் இப்பாடசாலையின் கல்வி வளா்ச்சியில் இப்பிரதேச மக்களின் பங்கு அதிகம் உண்டு என்பதனை இவ்விடத்தில் மறந்து விடலாகாது அதற்கு மேலாக இப்பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றும் ஏ.எம்.அன்வா் அவா்கள் இப்பாடசாலையின் அனைத்து விதமான முன்னேற்ற நடவடிக்கைகளில் பாரிய பாங்காற்றிய ஒரு நபர் தமது கடமை நேரங்களுக்கு மேலாக கண்னும் கருத்துமாக இவ் விஞ்ஞான, கணித பிரிவு தோற்றம் வளா்ச்சிக்காக அதிகம் செயற்பட்டு வந்துள்ளார்.

இவா்களுடன் எமது பாடசாலையின் முன்னாள் அதிபா்  ஐ.எல்.மஃறூப், தற்போதய அதிபா் ஏ.ல்.அபுல்ஹஸன் பழைய மாணவா்கள் குறிப்பாக வெளிநாடுகளில் பணிபுரியும் எமது உறவுகள் தமது முழுமையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி இருத்தனர்.

மேலும் மீராவோடை பள்ளி வாயல் நிருவாகம், மீராவோடை யுத் ஸ்டார் விளையாட்டு கழகம், பதுரியா மாஞ்சோலை அல்-இஹ்ஸான் விளையாட்டுக்கழகம்இகல்குடா கலாசார அமைப்பு அதில் அன்று அங்கம் வகித்த எமது பாடசாலையின் பழைய மாணவா் எனது அருமை நன்பன் எம்.யூ. றிபான் முகம்மட் மற்றும் அவா்களுடன் இனைத்ததாக பாடசாலையின் ஆசிரியா்கள்இ பாடசாலை அபிவிருத்தி சங்கம் பிரதேச நலன் விரும்பிகள்இகல்வி மாண்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி இருத்தனர். அனைத்து உறவுகளுக்கும் எமது  மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

இப்பாடசாலையில் பல சாவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப் பிரிவில் இருந்து 11 மாணவர்கள் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2