Published On: Thursday, January 14, 2016
வட்டகொடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டலாபிஷேகமும் இசை நிகழ்ச்சியும்
வட்டகொடை மேற்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தி நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு சங்காபிஷேக பூஜைகளைத்தொடர்ந்து பால்குட பவனி இடம்பெறும்.
பின்னர் மகேஸ்வர பூஜை அன்னதானத்தைத்தொடர்ந்து விசேட தியாகாராதனை இடம்பெற்று பிள்ளையார் அம்பாள் முருகன் ஆகிய மூர்த்திகளின் வௌிவீதி பவனி இடம்பெறவுள்ளது.17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரபல கலைஞர்களின் பங்குபற்றுதலோடு டிக்கோயா பாலுவின் சுப்பர் சைன்ஸ் இசைக்குழுவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் மழைத்துளி இளைஞர் கழகத்தின் கார்த்தி தெரிவித்தார்.
மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ள 0771839854 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
(க.கிஷாந்தன்)