ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ளகோரி தமிழகத்தை சேர்ந்த ராஜராமன், ஆதிகேசவன் உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் ஆஜராகி ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி முறையிட்டனர்.அந்த மனுவில் "ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சிவனை வழிபடுபவர்களின் நம்பிக்கைக்கு எதிரானது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு இத்தகைய உத்தரவை பிறப்பித்திருப்பது பொருத்தமற்றது" எனக் கோரியிருந்தனர்.இந்த மனு புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு தடையை நீக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது என்றனர்.இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடைக்கால தடை தொடருகிறது.