Published On: Friday, January 15, 2016
கிறீன்பீல்ட் முன்பள்ளி மற்றும் பொது நூலக ஆரம்ப விழாவும் மாணவர் கௌரவிப்பும்
கல்முனை சுனாமி வீட்டுத்திட்டமான ‘கிறீன்பீல்ட்’ கிராமத்தில் முன்பள்ளி ஒன்றையும் பொது நூலகம் ஒன்றையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் கிறீன்பீல்ட் கிராமத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தில் கல்விகற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கிறீன்பீல்ட் முகாமைத்துவ அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எல்.எம்.ஹபூல் ஆஸாத் தலைமையில் 2016-01-15 ஆம் திகதி இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை நகர் பள்ளிவாசலின் தலைவருமான கே.எம்.அப்துர் றஸ்ஸாக் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்துகொண்ட அதேவேளை விசேட அதிதிகளாக கல்முனை பிரதிகல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம், பிரதிகல்விப் பணிப்பாளர் முன்பள்ளி ஏ.எல்.எம்.சக்கப் றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.அன்சார், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உட்பட கிறீன்பீல்ட் முகாமைத்துவ அமைப்பின் செயலாளர் ரீ.ஆர்.அப்துர்ரஹுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மிகக்கோலாகலமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளி கல்விநிலையத்துக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதிதிகள் மாணவர்கள் பெற்றோர் என கல்முனை கிறீன்பீல்ட் கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
-எம்.வை.அமீர்-





