Published On: Friday, January 15, 2016
பசுமாட்டு இறைச்சி கடத்துவதாக கூறி மத்திய பிரதேசத்தில் தம்பதி மீது தாக்குதல்
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள ஹர்கியா ரெயில்வே நிலையத்தில் பெரிய பேக்குடன் முஸ்லீம் தம்பதி முகமது ஹூசைன் (வயது 43) நசீமா பானு (வயது 38) ஆகியோர் குஷின்நக்ர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹர்தாவில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு செல்ல பயணம் செய்தனர். அவர்கள் தங்கள் பேக்குகளில் பசு மாட்டு இறைச்சி மறைத்து கடத்துவதாக கூறி அவர்களது பேக்கையும் அருகில் இருந்த ஒரு மற்றொரு பேக்கையும் ஹவ் ரக்ஷா சமிதி ( பசு பாதுகாப்பு குழு) என்ற அமைப்பினர் சோதனை செய்தனர். பின்னர் அது பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அதில் வைத்திருந்த இறைச்சி ஆய்வக சோதனை மூலம் எருமை மாட்டு இறைச்சி என தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவ் ரக்ஷா அமைப்பை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களது பெயர் ஹேமந்த் ராஜ்புத்,சந்தோஷ் ஆகும்.
தம்பதிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.இது குறித்து ஹூசைன் கூறியதாவது:-நாங்கள் பயணம் செய்த போது அவர்கள் எங்கள் பொருட்களை சோதனை செய்ய வேண்டும் என்றனர். நாங்கள் இந்தியாவில் தான் வாழ்கிறோம் எங்களுக்கு எது தவறு சரி என தெரியும் என கூறினேன். நாங்கள் ஆட்டு இறைச்சியை மட்டுமே உண்கிறோம்.இறைச்சி கைபற்றியதாக கூறப்படும் பொருள் எங்களுக்கு சொந்தமானது அல்ல. கடைசியில் என்னையும் எனது மனைவியையும் போலீசார் வந்து கப்பாற்றினர்.ரெயில்வே நடைமேடையில், வைத்து சமிதி உறுப்பினர்கள் எங்களை தாக்கினார்கள். எனது மனைவியிடம் அவர்கள் தவறாக நடந்து கொண்டனர் நான் எனது உறவினருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் உள்ளூர் காரர்களுடன் வந்தார்.என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம், தாத்ரியில் உள்ள பிசோதா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28–ந் தேதி புகுந்த ஒரு கும்பல், அவரை அடித்துக்கொன்று விட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்பது குறிப்பிட தக்கது.