Published On: Friday, January 15, 2016
தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவது கவலை அளிக்கிறது தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி பேச்சு
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவது கவலை அளிக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 71 கோடியே 70 லட்சம்பேர் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தனர். அவர்களில் 30 கோடி பேர் ஓட்டு போட வரவில்லை.
உலகம் முழுவதும் பல ஜனநாயக நாடுகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருகிறது. ஒருசில குறிப்பிட்ட வகை மக்களிடையே, ஓட்டு போடுவதற்கு அக்கறையின்மை அதிகரித்து வருகிறது.
இதற்கெல்லாம் தீர்வாக, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது சரியான வழி மட்டுமின்றி, வாக்குப்பதிவை அதிகரிக்க மிகவும் உகந்த வழி ஆகும். வழக்கம்போல, இந்த ஆண்டும் ஜனவரி 25–ந் தேதி, வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டின் கோஷம், ‘எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது’ என்பதாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
