Published On: Friday, January 08, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வழிபாடுகள்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மலையகத்தில் அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜைகள் 08.01.2016 அன்று காலை இடம்பெற்றது. கினிகத்தேனை பிரதேச செயலக ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விசேட பூஜையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் கினிகத்தேனை பிரதேச செயலக சேவையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.
இலங்கை சோசலிச குடியரசு நாட்டின் நல்லாட்சி அரசின் மான்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்நாட்டின் அபிவிருத்தி மாற்றத்திற்கு உந்துசக்தியான தலைவராக உலக நாடுகள் போற்றவல்ல கூடிய மாபெரும் மனிதராக நோய்நொடியின்றி வாழவும் இவ்வாண்டில் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாக வேண்டும் எனவும் நல்லாசி வேண்டி இந்த பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிக்கையில்..
மான்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இலங்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஒரு மாமனிதர். மக்கள் அபிவிருத்தி தொடக்கம் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு மாற்றத்தினை உருவாக்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நீடுழி வாழ இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை கொண்டாடும் நாம் நீண்ட கால அபிவிருத்தியில் பின்தங்கி இருந்த மலையக மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் இவ் அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
இதனடிப்டையில் புதிய தனி வீடு அமைப்புகள், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சலுகைகள் கல்வி அபிவிருத்தி, வீதிகள் அபிவிருத்தி என ஒரு புதிய மாற்றத்தினை இவ் ஒரு வருட காலத்தில் செயலாற்றுவதற்கு ஏகப்பட்ட நிதியினை வரவு செலவு திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு எதிர்காலத்தில் இவ் பணிகள் நல்ல முறையில் நடந்தேர வாய்ப்புகளை உருவாக்கிய இவ் அரசாங்கத்திற்கு எந்த பிளவுகளும் ஏற்படக்கூடாது என்பதினை இங்கு தெரிவிக்கின்றேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற மாபெரும் சக்தியை அமைத்து அதற்கு புதிய வலுவூட்டிய இந்த நல்லாட்சி அரசாங்கம் நீண்ட கால ஆட்சியினை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)



