Published On: Wednesday, January 06, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய மழை வீழ்ச்சி.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு தொடக்கம் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகரம், மற்றும் ஓட்டமாவடி, நாவலடி, செங்கலடி, உன்னிச்ச போன்ற பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
அதேபோன்று மாவட்டத்தின் கிராமப் புரங்கள்இதாழ்நிலப் பகுதிகளும் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக நீர்நிரம்பி வழிந்து காணப்படுவதோடு, பொதுச்சந்தைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வியாபார நடவடிக்கைகள் பெறிதும் பாதிக்கப்பட்டதுடன், வீடுகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது..
இவ் அடை மழை தொடர்பு பேய்யுமாயின் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் ஆபத்தான நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறப்படுகிறது..


