Published On: Wednesday, January 06, 2016
வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
சாய்ந்தமருது வொலிவோரியன் நல்லாட்சி மன்றத்தினால் வறிய மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (05) வொலிவோரியன் பல்தேவை கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.
நல்லாட்சி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.மர்லின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர் பொறியியலாளர் ஏ.எம்.ஹிபத்துல் கரீம், எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஏ.நாபித், தொழிலதிபர்களான யூ.கே. தன்ஸில், எம்.எச்.நஸார், ஏ.ரீ.எம்.ஜலீல் உள்ளிட்ட பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதி அமைச்சரின் சேவையினை பாராட்டி நல்லாட்சி மன்றத்தின் பிரதிநிதிகளால் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் இறுதியில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸினால் வொலிவோரியன் பிரதான வீதி ஓரத்தில் மரம் நடுகையும் இடம்பெற்றது.
(ஹாசிப் யாஸீன்)