Published On: Thursday, January 21, 2016
மலையக புகைப்படப்பிடிப்பாளர்களின் சங்கம் ஆரம்ப நிகழ்வு
மலையக புகைப்படப்பிடிப்பாளர்களின் சங்கம் ஒன்று உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் ராம்தாஸ் மங்கல விளக்கேற்றுவதையும் சமூக ஆய்வாளர் பிரபா மற்றும் ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோர் தற்கால ஊடக சூழலில் புகைப்படங்களின் தேவை பற்றி உரையாற்றுவதையும் வர்த்தகர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்குவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
(க.கிஷாந்தன்)