எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 14, 2016

பொங்கல் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து

Print Friendly and PDF

பொங்கல் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: பொங்கல் திருநாளிலிருந்தாவது எதிர்வரும் காலங்களில் தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி வாழ வேண்டும். மக்களின் நலன் விரும்பும் நல்லாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். வெகு விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவு, தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர் காலத்தை உருவாக்கும் வகையில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்: நமது வாழ்க்கையில் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பொங்கல் திருநாள் என்பது மகிழ்ச்சியோடு கொண்டாடுவதும், நாம் வணங்கிப் போற்றுகிற மாடுகளை வணங்குவதும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். அந்த வகையில் பல்வேறு இன்னல்களுக்கிடையே அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தமிழக மக்களுக்கு கொண்டு வரும். ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத, கல்வி மற்றும் சுகாதாரச் செலவு இல்லாத, குடிசைகள் இல்லாத, வறுமையில்லாத, வளம் நிறைந்த, அறிவு செறிந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதல்– அமைச்சரின் தலைமையில் புதியதோர் தமிழகம் விரைவில் உருவாகப்போவது உறுதி. அதற்காக உழைக்க இந்த தமிழர் திருநாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: எல்லா நலனும், வளமும் தமிழ் மக்கள் பெற வேண்டும். இயற்கையும், இறைவனும் அதற்கு துணை நிற்க வேண்டும். “இனிய பொங்கல் நாளான இன்று முதல், நாம் அனுபவித்த தொல்லைகள், துயரங்கள் மறையட்டும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் ஒளி பரவட்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறட்டும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு துணை நிற்க வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாட்டு அரசியலில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நல்வாழ்வுப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கக்கூடிய அத்தனை ஜனநாயக சக்திகளும், புதிய விடியல் காணச் சூளுரை மேற்கொள்வோம். புற நானூற்றின் வழிவந்த புயங்களோடு சுழன்று பணியாற்றுவோம்; மலரட்டும் உழைக்கும் மக்களின் நல்லாட்சி.உலகம் முழுமையும் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:–கூடிவாழ்தல், கூடி உழைத்தல், கூடி மகிழ்ந்தல் என்னும் கூட்டுறவு பண்பாட்டை கொண்டாடும் பேரினம் தமிழினம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் நன்சிறர்மார்ந்த நேய கோட்பாட்டை உலக அரங்கில் உயர்த்தி பிடிக்கும் பெருமைக்குரிய தேசிய இனம் தமிழனம். இத்தகைய பாரம்பரிய பண்பாட்டு விழ மியங்களை பிற்போக்கு சக்திகளிடம் இருந்து மீட்கவும் பாதுகாக்கவும் தைத் திருநாளில் உறுதியேற்போம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக மேற் கொண்ட நடவடிக்கைகளால் இயற்கையின் எதிர் நடவடிக்கைகளுக்கு நாம் ஆளாகிட வேண்டிய அவல நிலைக்கு உள்ளாகியுள்ளோம். புதுப்பானையிட்டு, புது அரிசி இட்டு பொங்கலைக் கொண்டாடும் இந்நாளில் வினாக்களுக்கு விடை காணவும், புதியதோர் தமிழகம் படைத்திட பொங்கல் நாளில் பொங்கி எழுவோம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: தமிழனுக்குரிய அடையாளங்களை நாம் என்றுமே இழந்து விடக் கூடாது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு தொடர்ந்து நடைபெறச் செய்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இடையில் ஏற்பட்ட தடைகளை தகர்த்திட வேண்டும். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்:அநீதிக்கு எதிராக, இனப் படுக்கொலைக்கு எதிராக, தீண்டாமை, சாதிமத ஏற்றத் தாழ்வு, மணல் கொள்ளை, மது, மறுக்கப்பட்ட நீர் நில உரிமைகள், பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்ணடிமை, வேலை வாய்ப்பின்மை, தீண்டாமை, மண்ணின் வளச்சுரண்டல், மக்களின் நலச்சுரண்டல் என அனைத்து இழிவுகளுக்கும், அழிவுகளுக்கும் எதிராக.. உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் எழுச்சிப்பொங்கல்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்:தமிழக மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், செல்வம் பெருகட்டும். அன்பு மலரட்டும், அமைதி தவழட்டும். அனைவரது வாழ்வும், கரும்பு போல் இனிக்கட்டும். இத்தைத் திங்கள் முதல் மதுவில்லா தமிழகம் காணவும், 2016–ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நல்லாட்சி மலரவும், தமிழக மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.மேலும் மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், திராவிட மனித சங்கிலி நிறுவனர் டாக்டர் செங்கை பத்மநாபன் ஆகியோரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2