எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 21, 2016

தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் பிரமாண்டமான நிகழ்வுகள்

Print Friendly and PDF

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேசத்தில் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்துவது சம்பந்தமாக திணைக்களத் தலைவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் வெவ்வாய்க்கிழமை (19) கல்முனை பிரதேச செயலகத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.




ஜனாதிபதி செயலகத்தினதும், விளையாட்டுத்துறை அமைச்சினதும் வழிகாட்டலில்; எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் அமுல்;படுத்தப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் விசேட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளும் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இத்தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்வுகள் பற்றி ஊடகங்களுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கையில்,

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் விசேட கவனமெடுத்துள்ளேன். இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச செயலகங்கள் ஊடாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்குரிய அறிவுறுத்தல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்தோடு நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்திலுள்ள கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகிய மூன்று பிரதேச செயலகங்களையும், கல்முனை பொலிஸ் நிலையம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, கடற்படை, பாதுகாப்புப்படை, கல்முனை வலயக் கல்வி பணிமனை, பிரதேச விளையாட்டுக் கழகங்கள், அரச, தனியார் நிதி நிறுவனங்கள் என்பவற்றை இணைத்து இவ்வாரத்தினுள் பல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விளையாட்டு வாரத்தின் இறுதித் தினமான எதிர்வரும் 30ம் திகதி மக்களை விழிர்ப்பூட்டும் வகையில் நடை பவணி, சைக்கள் ஓட்டம், மரதன் ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

அதே தினம் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள், கண்காட்சி உதைப்பாட்டம் போட்டி, திணைக்கள உத்தியோகத்தர் களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் என்பன இடம்பெறவுள்ளதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கலை நிகழ்;ச்சியும் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.

(ஹாசிப் யாஸீன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2