Published On: Wednesday, January 20, 2016
EFIC அமைப்பின் வருடாந்த க.பொ.த. சாதாரணதர மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களின் விடுகை விழா
கடந்த 15வருடங்களாக கல்முனை பிரதேசத்திலே இலவச கல்விச்சேவை வழங்கிவரும் EFIC அமைப்பின் வருடாந்த க.பொ.த. சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களின் விடுகை விழா கல்முனை அல்-பஹ்ரியா மாகா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் 19.01.2016 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வு EFIC அமைப்பின் தலைவரும் ஆசிரியருமான எம்.எம்.எம். சிறாஜி யின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கணி கலந்து சிறப்பித்தார்கள். கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலகத்தினுடைய சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. அன்சார் கௌரவ அதிதியாக அட்டாளச்சேனை தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுபெற்ற சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஜ.எம். முஸ்தபா நிரந்தர அதிதியாக EFIC அமைப்பின் ஆலோசகரும் ஆசிரியருமான யு. முஹம்மட் அலி அமைப்பின் உருப்பினர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் மாணவர்களின் திறமைகளும் வெளிக்குனரப்பட்டன.
இந் நிகழ்வு க.பொ.த. சாதாரணதர மாணவிகளால் தொகுத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
