எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 01, 2016

அகிம்சை போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்ட போது அது ஆயுத போராட்டமாக மாறியது

Print Friendly and PDF

அகிம்சை போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்ட போது அது ஆயுத போராட்டமாக மாறியது. அந்த போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகளும் ஈர்க்கப்பட்டார்கள். மலையக இளைஞர், யுவதிகள் மத்தியிலும் அந்த போராட்டம் செல்வாக்கு செலுத்தியது இதற்கு அமரர்.சந்திரசேகரன் குறிப்பிடக் கூடியளவு பங்களிப்பு செய்தியிருக்கின்றார் என்பதை மறக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ஆர்.ராஜாராம், அட்டன் நகர சபையின் முன்னால் தலைவர் நந்தகுமார் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில்..

எவனோ ஒருவன் மன பலத்தை கொண்டிருக்கின்றோனோ தனது இலட்சத்திற்கு இறுதி வரை போராடிகின்றவனே வெற்றி பெறுவான். ஒரு போராட்டத்தை தாங்கி கொள்பவன் தான் இறுதியில் வெற்றி பெறுவான். இதனை மலையக மக்களும் வடகிழக்கு மக்களும் நன்கு அறிவார்கள்.

இராஜாதந்திர ரீதியாக நாம் யுத்தத்தில் வெற்றி பெறாமையின் காரணமாக அதன் நினைவுகளை மீட்டு கொண்டிருக்கின்றோம். சந்திரசேகரன் பாராளுமன்றத்திலும், வெளியிலும் எங்களுடைன் இணைந்து செயற்பட்டிருக்கின்றார்.

அவர் ஒரு போதும் மலையக மக்கள் வடகிழக்கு மக்கள் என்று பிரித்து பார்த்ததில்லை. எல்லோரும் தமிழ் அன்னையின் பிள்ளைகளாகவே பார்த்தார். அவருடைய நினைவு நன்றிக்குரிய தலைவர்களாலும் தொண்டர்களாலும் நினைவு கூறும் இந்த வேளையில் நானும் அதில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாங்கள் என்ன பாவம் செய்தோம். இன்னும் இந்த தோட்டங்களில் அடிமைகளாக இருக்கின்றோம் என இன்று நான் மலையக மக்களை சந்தித்த பொழுது அவர்கள் தெரிவித்த கருத்து. இதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு விடை காணப்பட வேண்டும். அதற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம்.

இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக உழைத்த இந்த மக்களுக்கு அவர்களுக்கான காணியை வழங்க ஏன் இன்று தயக்கம் காட்டப்படுகிறது. நிலம் இருந்தால் தான் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்ள முடியும். இன்றும் நாம் போரடி கொண்டு தான் இருக்கின்றோம்.

பல்கலைகழகத்திற்கு செல்கின்ற எமது மாணவர்கள் அதிகமானவர்கள் கலைத்துறையை படிக்கின்றார்கள். விஞ்ஞானம், தொழில்நுட்பம், வர்த்தகதுறை இவற்றை அவர்கள் விரும்பிகற்க அவர்கள் முன்வர வேண்டும். அதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். அல்லது தையல்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கற்க வேண்டும். நாங்கள் போரின் காரணமாக கல்வியின் உச்சத்தையும், தொழில்நுட்பத்தையும் கற்க முடியாத நிலை இருந்தது. இப்போது அது படிப்படியாக மாற்றம் அடைந்து வருகின்றது. இந்த நிலை மலையகத்திலும் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே இங்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

8ம் வகுப்பிற்கும் 10 வகுப்பிற்கும் இடையில் மாணவர்கள் அவர்களுக்கான துறைகளை தெரிவு செய்து கற்ப்பதற்கான சூழ்நிலை ஏற்பட வேண்டும். அதனை கல்வி இராஜாங்க அமைச்சர் தற்பொழுது படிப்படியாக செய்து வருவதை நாங்கள் அறிவோம். இன்று கல்வி துறை முன்னேற்றம் அடைவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று மலையக மக்களும் வடகிழக்கு மக்களும் வேறுப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அமைதியான முறையில் ஜனநாயக வழியில் நீங்கள் உங்களுடைய நிலங்களுக்காக போராட வேண்டும் என்றார்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2