எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 06, 2016

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பும் தொழில் வங்கியும் விரைவில் உருவாக்கப்படும் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

Print Friendly and PDF

கிழக்கு மாகாணத்திலிருக்கும் வறுமையை ஒழித்து மூவின மக்களதும் வாழ்வு நிலையை உயர்த்துவதை நோக்காகக் கொண்டு நாம் செயற்படுகிறோம் அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகளை கிழக்கை நோக்கி ஈர்த்து சுமார் ஒரு லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி வழங்குவதனூடாக இவ்விலட்சியத்தை அடைய முயற்சிக்கிறோம் தொழில் வாய்ப்புக்குப் பொறுப்பான செயலாளர் என்ற அடிப்படையில் மிக விரைவில் பிரத்தியேக தொழில் வங்கி ஒன்றை நாம் ஸ்தாபிக்க இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வசதி குறைந்த மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.




 அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று உங்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளை வைத்து சிறிய தொழில் முயற்சிகளை நீங்கள் தொடங்கி நடத்த வேண்டும். அதனூடாக உங்களுடைய வாழ்வு நிலையை உயர்த்திக் கொள்வதில் நீங்கள் ஊக்கத்துடன் செயற்படும் போது, உங்களுடைய அடுத்தகட்ட வளர்ச்சிக்காக மீண்டும் எங்களால் பங்களிப்பைச் செய்ய முடியும். யாரும் இரவோடு இரவாக வசதியுள்ளவர்களாக மாற முடியாது. அயராதமுயற்சியும்ஆண்டவனின் நாட்டமுமே நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருமென்பதை நீங்கள் எல்லோரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எம்மைப் பொறுத்த வரை பௌதீக வள அபிவிருத்தியையும் தனிமனித அபிவிருத்தியையும்சமாந்திரமாகக் கொண்டு செல்வதனூடாகவே உண்மையான சமூக அபிவிருத்தியைக் கொண்டு செல்ல முடியும். இன்று கிழக்கு மாகாண சபையிலுள்ள அனைவரும் இதில் ஒற்ற கருத்தோடு செயற்படுகிறோம். அதற்கான பல்வேறு முன்னெடுப்புக்களையும் செய்து வருகிறோம். அந்த வகையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொழும்பில் இடம்பெறப்போகும்‘’கிழக்கில் முதலிடுங்கள் - 02’’ என்ற தலைப்பிலான வெளிநாட்டுமுதலீட்டாளர் மாநாடுமிக முக்கியமானதாகும்.

கிழக்கில்பல்வேறு வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலிடத் தூண்டி, நமது வளங்களிலிருந்து உச்ச கட்ட பயன்களை அடையத் தீர்மானித்துள்ளோம். அதனூடாக பாரிய அபிவிருத்தியையும் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும். அவ்வாறு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி வறுமையை ஒழிப்பதோடுஇ நமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைவைப்புக்காகச் சென்று எதிர்நோக்கும் சமய சமூக கலாசாரபிரச்சினைகளுக்குமுற்றுப் புள்ளியையும் வைக்கவும் விழைகிறோம்.

அந்த வகையில், வெளிநாட்டு முதலீடுகளை கிழக்கை நோக்கி ஈர்ப்பதனூடாக சுமார் ஒரு லட்சம் வேலைவாய்ப்பைஉருவாக்கிவழங்கி, வறுமையைமுற்றாக துடைத்தெறியும் திட்டத்தைக் கொண்டுள்ளோம். தொழில் வாய்ப்புக்குப் பொறுப்பான செயலாளர் என்ற அடிப்படையில் மிக விரைவில் பிரத்தியேக தொழில் வங்கி ஒன்றைஸ்தாபிக்க்குமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன். 

அவ்வங்கியூடாக வேலையற்ற இளைஜர் யுவதிகள் பற்றிய முழு தகவல்களும் பெறப்பட்டு, முன்னுரிமையடிப்படையில் தொழில் வழங்கும் பொறிமுறையை உண்டாக்கவிருக்கிறோம். அதற்கான செயல்வடிவம் பற்றிய கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். மிக விரைவில் இத்தொழில் வங்கி ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் அங்கு தெரிவித்தார்.


(அபுஅலா, எம்.ஐ.எம்.றியாஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2