Published On: Thursday, January 07, 2016
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - பிரதி அமைச்சர் ஹரீஸ்
மாளிகைக்காடு மத்தி அல்-அறபா இயந்திப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (06) மீனவ சங்க காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது மீனவ சங்க தலைவர் எம்.எம்.ஆதம்பாவாவினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சங்கத்தின் தேவைகள் பற்றி பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் மகஜர் ஒன்றினையும் வழங்கி வைத்தார்.
மேற்படி சங்கத்தினதும், சங்க உறுப்பினர்களினதும் தேவைகளை நிறைவேற்றித் தருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் உறுதியளித்ததார்.
கடந்த தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் சாய்ந்மருது, மாளிகைக்காடு மீனவ சமூகத்தினர் என்னையும், கட்சியையும் நம்பி வாக்களித்தமைக்கு நானும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் நன்றியுடையவர்களாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.
(ஹாசிப் யாஸீன்)