Published On: Thursday, January 07, 2016
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (07) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், எம்.எஸ்.உதுமாலெவ்வை, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட 47 திணைக்களத் தலைவர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்இகடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 6 வகையான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதில் 100 நாள் வேலைத்திட்டங்களுக்காக 32 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்று 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் 32 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்த இவ்வேலைத் திட்டங்கள் 31.36 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு முடிவுறத்தப்பட்டுள்ளது என்றும் பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.
கடந்த முறை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள வேலைத் திட்டங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சீராக்கல், மீனவர் பிரச்சினை, மீனவர்களின் சந்தைப் படுத்தலுக்கான இலகு வழிமுறைகளை ஏற்படுத்தல், சுகாதாரத்துறை விருத்தி செய்தல் என்பனவற்றுடன் வைத்தியசாலைகளுக்களுக்கான அம்பியுலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வித்துறை அபிவிருத்தி என தொடர்பான பல செயற்திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் முன்வைக்கப்பட்ட கோணாவத்தை கொட்டுப்பாலம் தொடர்பில், குறிப்பிட்ட பாலத்தை விஸ்தீரனப்படுத்தி அந்தப் கொட்டுப்பாலம் ஊடாக நீர் விரைவாக செல்லக்கூடியவகையில் அமைப்பதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்குமாறும் இது தொடர்பில் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இக்கூற்று நிறைவேற்றபட்டுள்ளது என்று அதுதொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரையை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் வழங்கி வைத்தார்.
அபு அலா -

