Published On: Thursday, January 07, 2016
கல்முனை ஸாஹிராவின் சிரமதானப் பணியில் திடீரென கலந்து கொண்ட பிரதி அமைச்சர் ஹரீஸ்
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த “2016 சுத்தமான பாடசாலையும் ஆரோக்கியமான மாணவர்களும்” எனும் தொனிப்பொருளிலான சிரமதானப் பணி இன்று (7) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென இச்சிரமதானப் பணியில் கலந்து கொண்டார்.
இச்சிரமதானப் பணியில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் சிரமதானப் பணிக்கான மேலதிக ஒழுங்குகளை செய்து கொடுத்தார்.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிரமதான பணியில் கல்லூரி மாணவர்களின் பெற்றோர், பழைய மாணவர்கள், கல்முனை பொலிஸார், கல்லூரி மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் ஈடுபட்டனர்.
நிகழ்வில் பங்கேற்ற பிரதி அமைச்சர் ஹரீஸ், கல்லூரியின் விளையாட்டு மைதான அபிவிருத்தி சம்பந்தமாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக், கல்முனை மின் பொறியியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
மேலும் பிரதி அமைச்சரின் ரூபா 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கல்லூhயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட வேலைகளின் முன்னேற்றத்தினையும் பார்வையிட்டார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில் இவ்வாறதானதொரு பெருமளவிலான சிரமதானப் பணியொன்று இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும்.
(ஹாசிப் யாஸீன்)







