Published On: Thursday, January 14, 2016
வித்யாரம்ப விழா மல்வானை
முதலாம் ஆண்டு மாணவர்களை உத்தியோக பூர்வமாக பாடசாலையில் இணைத்தக் கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் கீழ் இன்று (14) மல்வானை உலஹிட்டிவல அல்- மஹ்மூத் வித்தியாலயத்தின் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக களனி வலயக் கல்வி பிரிவின் ஆசிரிய ஆலோசகர்கள் திருமதி பர்ஷானா, சுசிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தரம் 1 புதிய மாணவர்கள் வரவேற்று அழைத்து வரப்பட்டனர். பாரிய பௌதீகவள பற்றாக்குறையுடனும், ஆசிரியர் பற்றாக்குறையுடனும் இயங்கிவரும் இப்பாடசாலையில் மொத்தமாக இம்முறை (2016) முதலாம் தரத்திற்கு 76 மாணவர்கள் சேர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் அன்மைக்கால கல்வி முன்னேற்றமே இதற்கான பிரதான காரணமாகும்.
இந்நிகழ்வின்போது இரண்டாம் ஆண்டு மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள், வரவேற்பு பாடல்கள் என்பனவும் சிறப்பாக இடம்பெற்றதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரீ.எப். றுவைஸா மற்றும் ஆரம்ப பிரிவு ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்தனர்
(எஸ்.அஷ்ரப்கான்)




