எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 21, 2016

இடைக்கால தடையுத்தரவு தொடர்பான திகதியில் மாற்றமே தவிர அந்த மனு நிராகரிக்கப்பட வில்லை

Print Friendly and PDF

முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரவேலர்கள் கூட தற்காலிக வெற்றியை அடைகின்றார்கள் என்பதற்காக யஹுதிகளுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கோமாளித்தனமாக யாரும் கூறுவதில்லையே என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதி பேராளர் மாநாடு என்ற பெயரில் கூட்டப்பட்ட போலி மாநாட்டுக்கு எதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு வழங்குவதற்குப் பதிலாக இடைக்கால தடை உத்தரவு வழங்குவதற்கான முடிவினை எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக சகல பிரதி வாதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அன்றைய தினமே இடைக்கால தடை உத்தரவு தொடர்பான முடிவினை நீதிமன்றம் அறிவிக்கும்.

உண்மை இவ்வாறிருக்க பொய்களையும் சதிகளையும் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள் தடை உத்தரவிற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாக பொய்ப்பிரச்சாரம் செய்கின்றார்கள் இதற்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் நிராகரிப்பதற்கும் ஒத்தி வைப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை தங்களால் புரிந்துகொள்ளுகின்ற ஆற்றல் தங்களுக்கி;ல்லை என்பதனையே அவர்கள் இதன்மூலம் வெளிக்காட்டியிருக்கின்றார்கள் பாவம் என்னசெய்வது பானையில் உள்ளதுதானே அகப்பையில் வரும் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் விடுமுறை தினங்களாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வியாழக்கிழமையே விளம்பர அறிவித்தல் செய்து கட்சியின் செயலாளரான எனக்கு சனிக்கிழமையே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்ததது. அதுமட்டுமல்லாமல் யாப்பினுடைய விதிகள் பின்பற்றப்படாமல் பேராளர் மாநாடு என்ற பெயரில் ஒரு போலியான கூட்டத்திற்கு அழைத்துவிட்டு அதனைப் பேராளர் மாநாடு என்று பெயரிட்டிருக்கிறார்கள் இவைகள் அனைத்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது எனவே இதுதொடர்பாக சகல பிரதிவாதிகளுக்கும் கருத்துக்கூற சந்தர்ப்பமளிக்குமுகமாக மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே தடை உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தின் முடிவு தெரியவரும்.

உண்மை இவ்வாறிருக்க நாங்கள் வெற்றிபெற்று விட்டோம் இறைவன் எங்களோடு இருக்கிறான் உன்று சிலர் கொக்கரிக்கின்றார்கள் அதேநேரம் நீதியை நாடி நீதிமன்றம் போனதை சதியாம் என்கிறாகள் சதிகாரக்கூட்டம் நீதி தேடி நீதிமன்றம் சென்றது சதியா? அல்லது வஞ்சகத்தோடு விடுமுறை தினங்களைப் பார்த்து போலி மாநாடுகளை வைத்து கட்சியின் செயலாளருக்கே அதற்கு முதல் நாள் அழைப்பு அனுப்புவது சதியா? நீங்கள் சட்டபூர்வமாக மாநாடு நடாத்தியிருந்தால் ஏன் கோழைகளாய் விடுமுறை தினங்களுக்குள் மறையவேண்டும் பதிலாக போதுமான கால அவகாசத்தை வழங்கி அப்பொழுது நீதிமன்றத்தில் நீங்கள் சட்டபூர்வமாகத்தான் மாநாட்டை நடாத்துகின்றீர்கள் என்பதனை நிறுவி அவ்வாறான ஒரு தடை உத்தரவை தடுத்திருந்தால் உங்கள் பக்கம் நியாயமிருந்தது நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்று கூறமுடியும்.

;ஆனால் இங்கு வெற்றி என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது ஒரு புறமிருக்க சில நேரங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரவேலர்கள் கூட தற்காலிக வெற்றியை அடைகின்றார்கள் என்பதற்காக யஹ_திகளுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று யாரும் கூறமுடியுமா?  சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் நான் என்று இறைவன் கூறுகின்றான் எனவே சதிகாரர்கள்  வெற்றிபெற்றார்கள் என்று எடுத்துக்கொண்டாலும் சதிகாரர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கு வரமுடியுமா?
நாம் சத்தியத்திற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் இந்தப்போராட்டத்தில் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக இறைவனின் உதவிகொண்டு முன்னேறுவோம் எமது முஸ்லிம் சமூதாயம் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து முகநூல்களில் போலி அரசியல் செய்பவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு புதிய அரசியல் பாதையில் பயணிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது அதுதொடர்பான செயற்திட்டங்களை இன்ஷா அல்லாஹ் விரைவில் நாம் வெளியிடுவோம் எங்களிடம் சத்தியம் இருக்கின்றது உண்மை இருக்கின்றது சமூகத்திற்காக பேசுவதாக முகநூல்களில் நடிக்காமல் உண்மையாகப் பேசக்கூடிய திரானி இருக்கின்றது என்று நம்புகின்றவர்கள் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்
மாறாக பொய்ச்சத்தியமும் சந்தர்ப்பவாதமும் மட்டுமே இருக்கின்றது என்று தெரிந்துகொண்டும் அவர்களிடம் அதிகாரம் இருக்கின்றது பசை இருக்கின்றது என்பதற்காக அவர்களுக்குப் பின்னால் செல்லுகின்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை எனவே எமது பயணம் ஆரம்பித்து விட்டது இன்ஷா அல்லாஹ் அது தங்குதடையின்றி தொடரும் எம்மை நம்புகின்றவர்கள் எமது பயணத்தில் இணையப் புறப்படுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

(எஸ்.அஷ்ரப்கான்,அப்துல் ஹமீட்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2