Published On: Friday, January 08, 2016
நல்லாட்சி தொடர சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை
நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த துஆப் பிரார்த்தினையும் மரநடுகை நிகழ்வும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், உள்ளிட்ட மரைக்காயர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆசிவேண்டி துஆப் பிரார்த்தனையினை பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா நிகழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் பள்ளிவாசல் தலைவர் ஆகியோரினால் பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நடப்பட்டது.
(ஹாசிப் யாஸீன்)