Published On: Sunday, January 10, 2016
கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சான்றிதல்கள் வழங்கி வைப்பு
கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்ககளாகவும் ஆலோசகர்களாகவும் பணிபுரிபவர்களுக்கு பாராட்டி சான்றிதல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2016-01-09 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கப்பார் தலைமையில் கல்முனை பொலிஸ் பிரிவின் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிடின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.எல். ரணவீரவும் கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவும் அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் மற்றும் டாக்டர் ஏ.எல்.பாருக் ஆகியோரும் கலந்து கொண்ட அதேவேளை மதத்தலைவர்களும் அரச உயர் அதிகாரிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
-எம்.வை.அமீர்-



