Published On: Sunday, January 10, 2016
கல்முனை ஹுசைனியா கிட்ஸ் மொண்டசுரியின் வருடாந்த கலை நிகழ்சியும் பரிசளிப்பு விழாவும்
கல்முனை ஹுசைனியா கிட்ஸ் மொண்டசுரியின் வருடாந்த கலை நிகழ்சியும் பரிசளிப்பு விழாவும் எபிக் கல்வி நிறுவனத்தின் தலைவரும் ஆசிரியருமான எம்.எம்.சிராஜ் தலைமையில் கல்முனை மஹ்முத் பெண்கள் உயர் பாடசாலையின் றாசீக் பரீட் கேட்போர் கூடத்தில் 2016-01-09 ஆம் திகதி இடம்பெற்றது.
ஹுசைனியா கிட்ஸ் மொண்டசுரியின் ஆசிரியைகளான ஏ.எல்.நஸ்ரின் மற்றும் ஏ.எல்.றிஸ்வி ஆகியோரது நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபை உறுப்பினரும் வரலாற்றாய்வாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வும் கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் பிரிவின் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் ஆகியோர் கலந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்ததுடன் சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
கல்வியாளர்கள் ஊடகவியலாளர்கள் பெற்றோர் என மண்டபம் நிறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.








