Published On: Friday, January 08, 2016
துருக்கி நாட்டைப்போல் எமது நாட்டையும் பொருளாதார ரீதியில் முயற்சி செய்யும் நோக்கில் எமது நாட்டின் ஜனாதிபதி
துருக்கி நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் எவரும் அரச சொத்துக்களில் கையாடுவதில்லை என அந்நாட்டின் ஜனாதிபதி ரஜப் தையுப் அர்த்துக்கான் தெரிவித்துள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் கடமைநேர வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.பி.ரஜீஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஒரு வருட பதவியெற்பு நிகழ்வை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் ஆலோசனைக்கமைவாக இன்று காலை (08) இடம்பெற்ற மரநடுகை நிகழ்வின்போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்
துருக்கி நாட்டிலுள்ள ஜனாதிபதி மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அரச சொத்துக்களையும் அந்நாட்டின் பொருளாதார வளங்களிலும் எந்தவித கையாடல்களையும் வைப்பதில்லை. இதனால் அந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய முன்னெற்றங்களை கண்டு வருகின்றது.
அந்த நாட்டைப்போல் எமது நாட்டையும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையவைக்கும் முயற்சியில் எமது நாட்டின் ஜனாதிபதியும் பாரிய முயற்சியில் ஈடுபட்டு தீவிர கவனமும் செலுத்தி வருகின்றார்.
அந்தவகையில்இ எமது நாட்டின் ஜனாதிபதி பதவியெற்று ஒரு வருட காலத்துக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அவரின் பதவிக்காலம் முடிவுரும் தருவாயில் எமது நாடும் துருக்கி நாட்டைப்போல் பொருளாதார வளர்ச்சியில் பாரிய முன்னடைவைக்காணும் நிலைமை ஏற்படும். அதற்கான பொறுப்புக்களை இலங்கையிலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களுடன் பொதுமக்களும் இணைந்து செயற்படல்வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், வைத்தியசாலை தொற்றா நோய்ப்பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அபு அலா, ஏ.ஆர்.எம்.றிம்ஸான் -