Published On: Thursday, January 21, 2016
தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு தமிழக அரசு உத்தரவு
தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலருக்கு அந்தஸ்து உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:தமிழக அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலருக்கு, தலைமைச் செயலாளர் அந்தஸ்து உயர்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, 1883–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அம்புஜ் சர்மா [மத்திய அரசின் கனரக தொழில் கூடுதல் செயலாளர், அயல்பணி], பிரிஜ் கிஷோர் பிரசாத் [மத்திய உள்துறை கூடுதல் செயலாளர், அயல்பணி], தமிழக பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் ஆகியோர் தலைமைச் செயலாளராக நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.
1984–ம் ஆண்டு தமிழகத்தில் பணியில் சேர்ந்த ஆர்.ராஜகோபால் (மத்திய உள்துறை ஆலோசகர், அயல் பணி), டி.ஜேக்கப் (மத்திய பணியாளர் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர், அயல்பணி), தமிழ்நாடு மின் நிதிக் கழக கூடுதல் தலைமைச் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, தமிழக ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மீனாட்சி ராஜகோபால், ஸ்மிதா நாகராஜ் (மத்திய பாதுகாப்புத் துறை டைரக்டர் ஜெனரல், அயல்பணி), ருல்கும்லியென் புரில் (மத்திய உள்துறை கூடுதல் செயலாளர், அயல்பணி) ஆகியோருக்கு தலைமைச் செயலாளராக அந்தஸ்து உயர்வு அளிக்கப்படுகிறது.
1985–ம் ஆண்டு தமிழகத்தில் பணியில் சேர்ந்த தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், முதல்–அமைச்சர் செயலக கூடுதல் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன் ராவ், சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனரான கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் பியாரே மற்றும் சி.சந்திரமவுலி (மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர், அயல்பணி) ஆகியோரும் தலைமைச் செயலாளராக அந்தஸ்து உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி – சாகுல் ஹமீது